Image and video hosting by TinyPic தேவிவாசம் தொலைக்காட்சி DVTV
DVTV on DEVIVAASAM. Enjoy With DVTV

தீபா”வலி”யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.
ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்...

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள்... தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

நன்றி
“தமிழ்க் குடில்”

இன்பமும் துன்பமும்


ஒ..... மனிதா......
இன்பத்திற்காய் சிரிக்கிறாய்
துன்பத்திற்காய் அழுகிறாய்



சிரிக்க வைக்கும் விடயங்களை இன்பம் என்கிறாய்
அழ வைக்கும் விடயங்களை துன்பம் என்கிறாய்

சிரித்த தருணங்களை எண்ணியும் அழுதிருக்கிறாய்
அழுத நிமிடங்களை எண்ணியும் சிரித்திருக்கிறாய்
இனிச் சொல்லடா.......
அழுததிலும் அர்த்தமில்லை
சிரித்ததிலும் அர்த்தமில்லை

பின் எதில் தான் அர்த்தமுண்டு
அதை அறியும் போது......
உன் கண்கள் அழும்
உன் மனம் சிரிக்கும்.......

சுட்டது

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்


வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.


எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்
அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.
புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

கொழும்பில் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

அறிவித்தல்:
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.
நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்
இன்னும் பல‌..
வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com
முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.
யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.
இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..
"மேலே உள்ள அறிவித்தலானது 'ம்' வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்டது அத்துடன் நானும் தமிழ் நாட்டில் வலைப்பதிவர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் வலைப்பூ சம்பந்தமான கருத்துக்களை பகிர்வது போல நம்நாட்டிலும் இத்தகைய ஒன்றுகூடல் நடைபெற வேண்டும் என எண்ணியிருந்தேன் இப்போது அதற்கான காலம் முகம் தெரியாத நண்பர்கள் மூலம் கனிந்துள்ளது. மிகவும் முக்கியமான வேலை காரணமாக குறிப்பிட்ட திகதியில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டி இருப்பதால் வலைப்பூ நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்"

GPS-ம் WPS-ம்

இதெல்லாம் சாத்தியமாவென யோசித்துக் கிடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேலை மெனக்கெட்டு நாம் ஆரம்பித்த பணியை வெற்றிகரமாக முடிந்தபின் அதற்கு உலகம் தரும் வரவேற்பு அந்த சுமையையெல்லாம் இலகுவான சுகமாக்கிவிடும். புகழ்மிக்க ஆயிரம் பக்க அபூர்வ அரபிக் நாவல் ஒன்றை தமிழ்படுத்த மெனக்கெடுவது போன்றது அப்பணி. கூகிள் மேப்பில் காணப்படும் ஸ்ரிட் வியூ (Street View) வசதியைக் கொண்டுவர தெருதெருவாகப் போய் வேலைமெனக்கெட்டு வீடியோபிடித்து கணிணியில் ஏற்றினார்களாம். இறுதியில் நல்ல வரவேற்பு. இது போல இன்னொரு கும்பலும் தெரு தெருவாக ஆட்களை அனுப்பியிருக்கின்றார்கள். ஆனால் இன்னொரு வேலை விஷயமாக(அதுபற்றி பின்னர் பார்க்கலாம்).
ஒரு பொருளின் இருப்பிடத்தை கண்டறிய சேட்டலைட் வழியாலான ஜிபிஎஸ் (GPS) நுட்பங்கள் பிரபலமாயினும் அதின்மீதுள்ள நம்பிக்கை வல்லரசுகளுக்கே திகிலைத்தந்துள்ளன(இலங்கையின் உள்நாட்டு போரிலும் இந்த தொழில் நுட்பம் பெரும் பங்காற்றியது). அண்ட வெளியில் உள்ள 24 சேட்டலைட் (வானில் இதற்காகவே பிரத்தியேகமாக 24 சேட்டிலைட்டுகள் சுற்றிகொண்டிருக்கின்றனவாம். அவசரத்துக்கு உதவ கூட மூன்று சேட்டிலைட்கள். இந்த 27 சேட்டிலைட்களும் செத்தால் மொத்த GPS வசதியும் செத்துவிடும்) கும்பலில் ஒன்று செயலிழந்தாலும் நம் ஜிபிஎஸ் கருவிகள் சுணங்கிவிடுமாம். அமெரிக்காவின் வானுயர் டவுண்டவுன் கட்டிடங்களினூடே கார் புகுந்ததும் இந்த ஜிபிஎஸ் கருவிகளால் சேட்டலைட்டை தொடர்புகொள்ள இயலாமல் போவதால் அவை கப்சிப்பாகின.
சேட்டலைட் நுட்பத்தை பயன்படுத்தாமல் அருகே இருக்கும் செல்போன் டவர்களை தொடர்புகொண்டு அது வழியாக நம் இருப்பிடத்தை கண்டறிவது இன்னொரு வழி. பேருந்தில் பயணிக்கும் போது நாம் ஊர்களைத் தாண்டிச் செல்லும்போது உங்கள் போனிலும் டவர் ஊர் நெல்லியடியிலிருந்து அச்சுவேலிக்கு மாறுவதை கவனித்திருப்பீர்கள். ஆனாலும் ஒரு சின்னப் பிரச்சனை. அதுவால் அச்சுவேலியில் நீங்கள் எந்த சாப்பாட்டுக்கடை முன்னால் நிற்கின்றீர்கள் என மிகச்சரியாக சொல்ல முடியாது.
Wi-fi நம் ஊரில் புழக்கத்தில் இல்லை( மிக விரைவில் எதிர்பார்க்கலாம்). இங்கே கொழும்பின் நகர்பகுதிகளில் தெருவில் எங்கு போயினும் Wi-fiகள். பெரும்பாலும் Secured தான்(இந்த பதிவு கூட இன்னொருவரின் Wi-fi மூலம் தான் பதியப்பட்டது). இந்த Wi-fiகளை வைத்தே நாம் இருக்கும் இடத்தை அடையாளம் காணலாமென ஒரு கும்பலுக்கு தோண தெருத் தெருவாகப் போய் எந்த தெருவில் எந்தெந்த Wi-fi-க்கள் உள்ளன என குறிப்பெடுத்து ஒரு பெரிய டேட்டாபேசையே உருவாக்கியுள்ளனர் Skyhook காரர்கள். உலகமெங்கும் மொத்தம் பத்து லட்சம் Wi-fi களை குறித்து வைத்திருக்கின்றார்கள். உங்கள் இருப்பிடத்தை ஒருவர் கண்டறிய சேட்டலைட்டெல்லாம் போகவேண்டாம். பக்கத்தில் ஒரு Wi-fi இருந்தாலே போதும். Wi-Fi Positioning System (WPS) எனப்படும் இந்த நுட்பம் வழி இயங்கும் http://loki.com-ல் என் இருப்பிடத்தை கேட்டுப்பார்த்தேன் இரு நொடிகளில் மிகச் சரியாகச் சொன்னது. வழக்கமாக என் கையடக்க தொலை பேசியிலுள்ள GPS-சோ "Waiting for accuracy" - என சொல்லிக்கொண்டே இரு நிமிடம் எடுக்கும். அதுபோல துல்லியமும் மாறுபடுகின்றது. இந்த மாதிரியான location aware பயன்பாடுகளால் நமக்கு நன்மைகள் என்னவாம்? உங்கள் இருப்பிடத்துக்கு மிக அருகிலுள்ள தொலைத்தொடர்பு நிலையம் அல்லது மருந்து கடை எதுவென ஒரே சொடுக்கில் தெரிந்து கொள்ளலாம்.

கையடக்க தொலைபேசியின் அபாயம்

மாற்றம் ஒன்றே நிலையானது என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். (Change is permanent) நவீன தொழில் நுட்பங்கள் எமது வாழ்க்கை முறையை ரொம்பவும் மாற்றிவிட்டது அதுவும் கையடக்க தொலைபேசி பாவனை எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டது சாப்பிடும்போதும் குளிக்கும்போதும் தூங்கும் போதும் ஏன் மலம் கழிக்கும் போதும் என நம்மில் பலர் கையடக்க தொலைபேசியுடனே தங்களது வாழ்க்கையை நடாத்துகின்றார்கள். ஒருநாள் சாப்பிடாமல் தண்ணீர் அருந்தாமல் கூட இருப்பார்கள் ஆனால் இந்த கையடக்க தொலைபேசி இல்லாமல் ஒரு கணப்பொழுது தானும் உயிர் வாழ முடியாது என்ற நிலையே நம்மில் பலருக்கு உண்டு அது ஒரு வகையில் style உம் கூட.
அதுவும் இளம் வயது காதலர்கள் பலர் உண்ணமறந்து ரீசார்ஜ் செய்தவாறு எந்த நேரம் பார்த்தாலும் கையடக்க தொலைபேசியை காதினுள் வைத்தவாறு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்கள் அவ்வாறு கதைக்கும் போது தொலைபேசியின் பட்டறி தனது சார்ச்சை இழந்து விடுகின்றது ஆனால் நம்மவர்களுக்கு எப்படியாவது அலட்டிக்கொண்டே இருக்கவேண்டும் எனவே அவர்கள் பட்டறியை சார்ஜ் செய்தவாறு தொடர்ந்து கதைப்பார்கள் இங்குதான் விதி சதிசெய்கிறது அதாவது பட்டறியை தொடர்ந்து சார்ஜ் செய்தவாறு கதைக்கும் போது மின்கசிவு (electric leakage) ஏற்பட்டு தொலைபேசி வெடித்து சிதறுவதற்கு வாய்ப்புண்டு அவ்வாறே தூங்கும் போதும் பட்டறியை சார்ஜ் செய்தவாறு நம் அருகில் வைப்பதும் தவறானது இதன்போதும் தொலைபேசி வெடிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. என்ன ஒன்றும் புரியவில்லையா? இப்போது கீழுள்ள படங்களை பாருங்கள் நன்கு புரியும்.



என்ன இப்போ புரிந்து விட்டதா?

ஜீவத்தின் பூங்கொடியே

மே மாதம் மேதினியில்
வந்துதித்த சோதரியே
தேன் மொழியாய் சந்தரிக்கும்
ஜீவத்தின் பூங்கொடியே

அந்தியில் பூக்கும் பூமகளே
வாசம் வீசும் மலரே
உள்ளத்தின் உயிராய்
ஓடும் செங்குருதியே

உயிரின் உயிராய் வாழும் தீ நாக்கு
கண்களில் ஊறும் உந்தன் அன்பை
உள்ளத்தில் நிறுத்தியதால்
முல்லைப் பூவாய் நறுமணக்கும் பேதை நீ

எங்கள் வாழ்வின் வசந்தம் நீ
மாதா பிதாவிற்கு அடுத்தவள் நீ
பொன் வான தேசத்தில்
விண் மீன் நனைக்கும் மேகங்களில்
தேவி வாசத்தினுள் தவழும் குமரி நீ

வண்ணத்துப் பூச்சிகளின் ஜீவிதம் நீ
எமது இதயக் கனவை சுமப்பவளே
மலரும் மொட்டுக்களில்
துடிக்கும் சந்தம் நீ
உள்ளத்தால் உள்ளம் தேடுதலில்
ஆன்மாவினால் சிரஷ்டிக்கும் தெய்வம் நீ

புதுமைகள் படைத்திட
புதுவாழ்வு பெற்றிட
புயலாய் புகுந்தாய் பல்கலையினுள்
விவசாயத் துறையை எள்ளி நகையாதே
தூக்கத்தை தொலைத்து நலமாக கற்றிடு
புதுமையான நட்புகளை ஜீவனாய் பெற்று
புதுமைகள் பல படைத்திடு

எமது குடும்பத்தின் கருவறையினுள்
வியாபித்திருக்கும் பேசும் விக்கிரகம் நீ
கன்னல் சுருதியாய் காதில் ரீங்காரமிடும்
உன்குரல் கல்லையும் கனியாக்கும்

உறவாக உனையாக்கி கொள்ள
யாம் செய்த பயன் யாதோ
பார்க்கும் திசையெல்லாம்-நீ
வெண்ணிலவாய் ஜொலிக்கின்றாய்

என் கன்னி கவிதையின்
கருப்பொருளாய் உயிர்ப்பவள் நீ
சத்தமேதுமின்றி சேறு பூசும் உலகத்திலே
ஏட்டோடு போராடுபவள் நீ
இன்ப வானில் சிறகசைக்கும்
இளம் பறவை-ஆனாலும்
குடும்பத்தின் ஒருமைக்கு திரையிடும் வேலி நீ

ஈர் பதினோராண்டுகள் கடந்து
வீறுநடை போடுபவள் நீ
இன்னும் பல்லாண்டுகள் மேதினியில்
பலவும் பெற்று இன்பமாய் வாழ
ஆன்மாவின் சிரஷ்டத்தினுள்
வாழ்த்துக்கள் பற்பல.


(2001 ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலில் குடும்ப உறவுகளை பிரிந்து இருந்தபோது என் எண்ணத்தில் விரிந்த வரிகள் தான் இவை. இன்றைய தினத்தில்(மே 30) எனது எண்ணங்களை இங்கே பகிர்வது மிகவும் பொருத்தமானதாகும்)

அன்னைக்கு ஓர் அன்புத்தினம்

உலக அன்னையர் தினத்தில் அம்மாவின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த வலைப்பூவில் எனது முதல் பதிவை பதிவுசெய்வதில் மிக்க மகிழ்ச்சி (எனக்கு வனிதா தேவி, வனஜா தேவி, கிரிஜா தேவி என மூன்று அன்னையர்கள்). உலகிலே மிகவும் பாதுகாப்பானதும் வசதியானதுமான இடம் தாயின் அந்த இருண்ட கருவறைதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. எதற்குமே ஒப்பிடமுடியாத தாயின் கருவறையில் அந்த பத்து மாதங்களும் எவ்வளவு சுகமாக பாதுகாப்பாக தூங்கியிருப்பேன் அந்த சுகம் மீண்டும் வராதா என்று ஏங்கித்தவிக்கும் நாட்கள்தான் எத்தனை. சிறுவயது முதல் எவ்வளவு துன்பங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இன்றுவரை எமக்காக தன்னையே உருக்கி விரதம் இருக்கும் அந்த அன்னையின் அன்பிற்கு இந்த உலகில் எந்த உறவு ஈடாகமுடியும். எவ்வளவு பொறுமை எவ்வளவு அடக்கம் எவ்வளவு அன்பு எதையும் தாங்கும் மனப்பாண்மை இவ்வாறு எழுத்தில் அடக்கமுடியாத எண்ணற்ற அன்புடையது அந்த தாயுள்ளம். இன்று அந்த அன்னைக்கு ஓர் அன்புத்தினம் பெறுதற்கரிய அந்த உறவை நேரடியாகவாழ்த்த முடியாத துர்ப்பக்கியசாலிகளுள் நானும் ஒருவன் அதனால் உலகறிய என்னுடைய வாழ்த்தினை உங்களுடைய பெயரால் உருவாக்கப்பட்ட இந்த வலைப்பூவின் ஊடாக தெரிவிப்பதில் எனக்கு ஓரளவு மனத்திருப்திதான் அம்மா. அன்பென்றாலே அதன் மறுவடிவம் நீங்கள்தான் அம்மா........

கிரேக்கத்தில் முன்னோர்கள் தங்கள் தாய் கடவுளை வணங்கி விழா எடுத்தார்கள் இந்த விழா காலப்போக்கில் ரோமிற்கு பரவியது ரோமானியர்கள் தங்களுடைய தாய் கடவுளுக்கு ஒவ்வொரு வருடமும் மார்ச்15 தொடக்கம் மார்ச்18 வரை மூன்று நாட்கள் விழா எடுத்துக்கொண்டாடினார்கள் ஆனாலும் ரோமானியர்கள் அந்த நாட்களில் மற்றோனலியா (Matronalia) எனும் விழாவினை தங்களுடைய ஆதிக்கடவுளான ஜுனோ (Juno) எனும் கடவுளுக்காகவும் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்கள் அந்த நாட்களில் இந்த தினங்களில் தங்களுடைய அன்னையருக்கு பரிசு கொடுத்து மதிப்பளித்தார்கள் இதுவே பின்னர் நவீன அன்னையர் தினத்திற்கு வழிவகுத்தது.

உலகில் அன்னை இல்லாத குடும்பமே இல்லை அந்த தாயை இதயங்களில் இருத்தி மரியாதை செய்து வாழ்த்தும் நவீன அன்னையர் தினம் 1912ம் ஆண்டளவில் அன்ன ஜார்விஸ்(Anna Jarvis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது 20ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நவீன அன்னையர் தினம் கிறிஸ்தவ கலாச்சாரத்தை அடிப்படியாககொண்டது ஆனாலும் 16ம் நூற்றாண்டுகளில் கொண்டாடப்பட்ட ஞாயிறு அன்னை (Mothering Sunday) தினமே இன்று ஐக்கிய இராச்சியத்தில் கொண்டாடப்படும் அன்னையர் தினமாகும் ஐக்கிய அமெரிக்காவில் அன்னையர்தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகின்றது இது ஐக்கிய இராச்சியத்தில் கொண்டாடப்படும் ஞாயிறு அன்னையர் தினத்திற்கு ஒப்பானது அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினத்தினை அடிப்படையாக கொண்டுதான் பலநாடுகள் தங்கள் அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன (இந்த நாடுகள் எப்பதான் தங்கள் சுயபுத்தியில் இயங்கப்போகின்றார்களோ தெரியாது இவற்றில் பல தென்னாசிய நாடுகளாகும்) அன்ன ஜர்விசினால் 1912ல் உருவாக்கப்பட்ட அன்னையர் தினம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வூட்ரோ வில்சன் அவர்களால் Mother's day என பிரகடனப்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டது. வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினத்தினை கொண்டாடினாலும் அன்னையை மரியாதை செய்து வாழ்த்தி வணங்குவது சந்தோசமாக வரவேற்கத்தக்க விடயம்தான்.